court

img

ஊதியம், ஓய்வூதியம் என்பவை அனைத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளாகும்.... தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு....

புதுதில்லி:
ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் போன்றவைஅனைத்து ஊழியர்களுக்கு மான அடிப்படை உரிமைகளாகும் என்றும், நிதி இல்லை என்று கூறி அதனைத் தராமல் காலநீட்டிப்பு மேற்கொள்வது கூடாதுஎன்றும் தில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வடக்கு தில்லி மாநகராட்சி, தங்கள் மாநகராட்சி க்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் தங்கள் ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் காலத்தே ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் வழங்க முடியவில்லை என்றும் எனவே இதற்கு ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரையிலும்கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும்கோரி மனுச் செய்திருந்தது. இத னை ஏற்றுக்கொள்ள மறுத்து, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்கள்.நீதியரசர்கள் விபின் சாங்கி மற்றும் ரேகா பள்ளிஆகியோரடங்கிய அமர்வாயம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறது. நீதிமன்றம், ஏற்கனவே தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளும் தங்களுடைய ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களு க்கும் நிலுவை எதுவுமின்றி ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் ஏப்ரல் 5க்கு முன் அளித்திட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.இதனை எதிர்த்து வடக்கு தில்லி மாநகராட்சி சார்பில்மனு தாக்கல் செய்யப்பட்ட போதே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு தீர்ப் பளித்துள்ளார்கள். அவர்கள் மேலும் அத்தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நிதி இல்லை என்பது காரணியாக இருக்கக் கூடாது
“ஊதியம் மற்றும் ஓய்வூதியம் என்பவை ஊழியர்கள் அல்லது ஓய்வூதியர்களின் அடிப்படை உரிமைகளாகும்.ஊதியம் பெறும் உரிமையும், ஓய்வூதியம் பெறும் உரிமையும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான மற்றும் சுதந்திரத் திற்கான உரிமையின் ஓர் அங்கமாகும்.இவர்களுக்குக் காலத்தே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அளித்திட போதுமான நிதி இல்லை என்று கூறுவது ஒரு காரணியாக இருந்துவிட முடியாது.”இவ்வாறு உயர்நீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்ப ளித்துள்ளார்கள். (ந.நி.) 

;